Tuesday, February 19, 2008

முஷாரப் கட்சி படுதோல்வி: ஷெரீப்-பெனாசிர் கட்சிகள் முன்னணி

பாகிஸ்தானில் நேற்று நடந்த நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மறும் பெனாசிர் கட்சிகள் முன்னணியில் உள்ளன. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் கண்காணிப்பில் கீழ் நடந்த இந்தத் தேர்தலில் முக்கால்வாசி வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கத்திலிருந்தே நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி முன்னணி பெற்றது. 2வது இடத்தை பெனாசிர் பூட்டவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றுள்ளது. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

மொத்தம் உள்ள 324 எம்.பி. தொகுதிகளில் இதுவரை 128 இடங்களுக்கான முடிவுகள் தெரிய வந்துள்ளன. அதில் நவாஸ் கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. பெனாசிர் கட்சி 38 இடங்களைப் பிடித்துள்ளது. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சிக்கு 18 இடங்களே கிடைத்தன. மற்றவர்கள் 27 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

முஷாரப் ஆதரவு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் சுஜாத் உசேன் முன்னாள் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி உள்ளிட்ட பல தலைவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர்.

நவாஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், பெனாசிர் கட்சியும் பெருவாரியான வெற்றியைக் குவிக்கும் எனத் தெரிகிறது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இந்தக் கட்சிகள் கைப்பற்றும் எனவும் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

Thursday, February 14, 2008

காதலர் தினம்

ஒரு ஊரில் கணவனும், மனைவியும் இருந்தார்கள். அவர்கள் மாட மாளிகை, கோட கோபரத்தில் மிக வசதியாக இல்லாவிட்டாலும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். இப்படி சந்தோசமாக வாழ்ந்தாலும் அவரகள் இருவர் மனதிலும் அடிக்கடி சிறிது வருத்தம் இழையோடும். அவனுக்கோ தன் மனைவியின் அழகான மனைவியின் கூந்தலுக்கு ஒரு குஞ்சம் வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று. அவளுக்கோ தன் கணவனின் அறுந்து போன கைக்கடிகாரத்திற்கு ஒரு வார் பட்டை வாங்கி கொடுக்க முடியவில்லையே என்று. வருத்திலும் ஒரு ஒற்றுமை அவர்களிடம். இப்படி இருக்கும்போது காதலர் தினம் வந்தது. சரி அவளுக்கு இந்த வருடமாவது ஆச்சிரியம்படும் வகையில் ஒரு பரிசு கொடுக்கலாம் என்று திட்டமிட்டான். காதலர் தினமும் வந்தது. ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வது என்று திட்டமிட்ட படியே காலையிலெ வேளைக்கு சென்றவன் விட்டு இரவு வீட்டுக்கு திரும்பினான். மனைவின் நினைவும் அவ்வறே இருந்தது. அவன் மனைவிடம் சென்று வாழ்த்து சொல்லி பரிசை கொடுத்தான். அவளும் தன் ஒரு பரிசை அவனுக்கு கொடுத்தாள். இருவரும் பரிசை பிரித்தார்கள், பிரித்தவுடன் இருவர் கண்களிலும் கண்ணீர்.குஞ்சமும், கடிகார வார்பட்டையும் பரிசாக இருந்தன். இதிலும் ஒற்றுமையை பாருங்கள், அவள் தன் கூந்தலை விற்று தன் கணவனுக்கு வார்பட்டையும், அவன் தன் கடிகாரத்தை விற்று அவளுக்கு குஞ்சமும் வாங்கியிருந்தார்கள்.

என்னடா எல்லோரும் காதலர் தினம், காதலர் தினம் அப்படின்னு எழுதிகிட்டு இருக்காங்க, நம்ம பங்க்குக்கு நாமலும் கடிப்போம்னு எப்பவோ படிச்சத ஞாபகப் படுத்தி எழுதியிருக்கேன். வலிச்சா மன்னிக்கவும். இதவிட ஒரு காமெடி என்னான என் நண்பன்ட்ட காண்பிச்சு எப்பிடிட இருக்குன்னென். அவன் சொன்னான் கதை நல்லாத்தான் இருக்கு, ஆனா கடைசியில அவங்க அழுவுராங்கலே எதுக்கு தெரியுமான்னு கேட்டான். எதோ புதுமைய்ய சொல்லுவான்னு என்னடான்னேன். அந்த பொருளை ரெண்டு பேருமே பயன் படுத்த முடியலயேனு தான் அழுவராங்க அப்படின்னான்

Sunday, February 10, 2008

பூனை குறுக்கே வந்தால் சகுனமா?

நம்ம ஆட்கள்கிட்ட இருந்த ஒரு கெட்ட பழக்கம் மூடபழக்க வழக்கம். பூனை குறுக்க போக கூடாது, விதவைங்க எதிர்க்க போககூடாது, அதே மாதிரி ஒத்த பிராமணன் எதிர்க்க வந்தா சகுனம் சரியில்லன்னு சொல்லுவாங்க. இப்ப அந்த மாதிரி இல்லாவிட்டாலும்., அரசல் புரசலா அங்கொண்றும், எங்கொண்றுமா பேசிகிட்டுத்தான் இருக்காங்க. நம்ம பெரியவங்க சொன்ன ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா அது அப்படியே மருவி உண்மையான காரணமே மறைந்து போய் விட்டது. சமீபத்தில படிச்சத உங்கள் இடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான் இந்த பதிவு.

வெளியில போறப்ப பூனை குறுக்கே போனா சகுனம் சரியில்ல, கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு செல்லுனும்னு சொல்வாங்க. அதனுடைய உண்மையான காரணம் என்னான்ன, அந்த காலத்திலெல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னோரு ஊருக்கு போக நீண்ட தூரம் காட்டு வழியா பிராயாணம் பண்ணனும். சிருத்த, காட்டுபூனை, புலி போன்ற மிருகங்கள் இருக்கும். நாம காட்டு வழியா நடந்து போகுபோது, ரொம்ப தூரத்தில அது குறுக்காக போனா உடனே கொஞ்ச நேரம் நிக்கணும். எனென்றால் இந்த காட்டுபூனை, சிருத்த, புலி எல்லாத்திற்கும் ஒரு குணம் உண்டு. இந்தபக்கத்திலிருந்து அந்த பக்கம் போன உடனே போகாம கொஞ்சம் நேரம காத்திருக்குமாம், ஏதும் இரை கிடைக்குமா என்று. அதனால்தான் நம்ம பெரியங்க இந்த மாதிரி சொல்லிருக்கங்க. அது அப்பிடியே மருவி போய் இப்படி ஆகி விட்டது. ஆனா ஒத்த பிராமணன் எதிர்க்க வந்தா சகுனம் சரியில்லன்னு, ஏன் சொன்னாங்கன்னு சத்தியாமா எனக்கு தெரியாதுங்க. யாரவது தெரிஞ்சா சொல்லுங்க.