Monday, May 19, 2008

சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல்

முன்பெல்லாம் இந்திய வங்கிகளுக்கு பணம் அனுப்ப ராபில்ஸ் பிலேஸுக்குதான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது பரவாயில்லை, ரெமிட்டன்ஸ் சென்டர் திறந்து சேவை பண்ணி கொண்டிருக்கிறார்கள். இது ஓரளவிற்கு பாரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் பணம் அனுப்புவதற்காக விடுமுறை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஆன்லைனில் பணம் அனுப்பும் முறையினால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இது ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கிகள் டிபிஸ் வங்கியுடன் இணைந்து இச்சேவையை வழங்கி வருகிறது. கடந்த வருடத்திலிருந்து நமது இந்தியன் வங்கியும் இச்சேவையும் டிபிஸ் வங்கியுடன் இணைந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் முறையை வழங்கி வருகிறது.

ஐசிஐசிஐ மற்றும் HDFC வங்கிகளில் பதிவு செய்வது சுலபம். வீட்டிலிருந்தே பதிவு செய்து பணம் அனுப்பி கொள்ளலாம். ஆனால் நமது இந்தியன் வங்கிகளில் பதிவு செய்வது என்பது கடவுசீட்டு வாங்குவதற்கு சமமானது. நேரடியாக சென்று பாரம் பூர்த்தி செய்து, புகைபடத்தையும் ஒட்டி கொடுத்தால்தான் அடையாள பெயரையும், கடவு சொல்லையும் கொடுப்பர்கள். இப்போது இந்தியன் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் பணம் அனுப்ப 6 வெள்ளி கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் HDFCயில் 250 வெள்ளிக்குமேல் பணம் அனுப்ப கூடுதலாக வெள்ளி கொடுக்க வேண்டியதில்லை.

ஒர் சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இந்தியன் வங்க்கிகும் HDFC மூலம் பணம் அனுப்ப முடியும்.