Saturday, June 7, 2008

நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது

ஒரு ஊரில் 60 வயதான பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நாள் அவருடைய மனைவி இறந்து விட்டாள். காரியங்கள் எல்லாம் முடிந்தது. அவர் தனிமையில் இருந்ததால் அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு துணைக்கு ஒருவர் வேண்டும் என்று சொல்லி ஒரு 20 வயது பெண்ணை திருமணம் பண்ணி வைத்தார்கள். அவர்களுக்கு அடுத்த வருடதிதிலே ஒரு குழந்தையும் பிறந்தது.(எப்படின்னு கேக்காதிங்க). சிறிது நாட்களுக்கு பிறகு அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு, பிரிந்து வாழவது என்று முடிவு செய்து நீதிமன்றம் சென்றார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவர்கள் பிரிந்து வாழ தீர்ப்பு வழங்கியது. இப்போது பிரச்சனை குழந்தை யாரிடம் வளர்வது என்று?.
அந்த பெண்ணோ அவளின் வயதை கணக்கில் கொண்டு குழந்தை தன்னிடம் இருந்தால்தான் பாதுகாப்பாகவும் நன்றாகவும் வளரும் என்று கூறுகிறாள். அந்த பெரியவரோ, தன் செல்வத்தை கணக்கில் கொண்டு குழந்தை தன்னிடம் இருந்தால்தான் பாதுகாப்பாக வளரும் என்கிறார். நீதிபதிக்கோ குழப்பம்!
அப்போது அந்த பெரியர் நான் ஒரு குட்டி கதை கூறுகிறேன், அதற்கு பின் நீங்கள் தீர்ப்பு கூறுங்கள் என்றார்.
நான் 5 ரூபாய் நாணயத்தை எடுத்து தானியங்கி தேனீர் வழங்கும் இயந்திரத்தில் போடுகிறேன். அது பேப்பர் குவளையில் தேநீரும் வழங்கியது. இப்போது அந்த தேநீர் எனக்கு சொந்தமா அல்லது அந்த இயந்திரத்திற்கு சொந்தமா? இதற்குமேல் தாங்கள் தீர்ப்பு கூறுங்கள் என்றார்.
இது எப்படி இருக்கு!!
நீதிபதி என்ன தீர்ப்பு கூறியிருப்பார்ன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

5 comments:

மங்களூர் சிவா said...

/
20 வயது பெண்ணை திருமணம் பண்ணி வைத்தார்கள். அவர்களுக்கு அடுத்த வருடதிதிலே ஒரு குழந்தையும் பிறந்தது.(எப்படின்னு கேக்காதிங்க)
/

அதெல்லாம் முடியாது கேப்போம்!!!!
:))))))))

இக்பால் said...

இப்படியெல்லாம் கேக்காதிய்யா. அதற்கு பதில் சொன்னா, அப்புறம் அது காமகதையா ஆகிவிடும்

மாதங்கி said...

உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இக்பால்

கோவை விஜய் said...

புகைப்பட பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி


கோவை விஜய்

http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

சூப்பரு. நல்லா எழுதறீங்க. நகைச்சுவை நடை நல்லாருக்கு. வாழ்த்துக்கள்.
இன்னும் எதிர்பார்த்து
சுபாஷ்