ஒரு நாள் என் நண்பண் தன் கைத்தொலைபேசி களவு போய் விட்டதாகவும். உலக கைத்தொலைபேசி அடையாள எண்ணை(IMEI - International Mobile Equipment Identify) வைத்து, அந்த தொலைபேசியை உபயோகபடுத்த முடியாதபடி ஏதும் செய்ய முடியுமா என்று கேட்டார். காணாமல் போனால் விடு, அடுத்தவனாவது அதனை பாவிக்கட்டுமே என்றேன் நான்.நானாக தவற விட்டிருந்தால், அது என்னுடைய தவறு என்று விட்டிருப்பேன். ஆனால் இது என் வீட்டினுள் இருந்து களவு போனது. ஆதாலால் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். களவு போனது இந்தியாவில். எனக்கு அதை பற்றிய அறிவு எனக்கு இல்லை. நான் பதிவுலக நண்பர்களிடம் கேட்கிறேன், நிச்சயமாக உனக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லி நம் பதிலக நண்பர்களின் நன்மதிப்பை காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.


