Thursday, August 28, 2008

கைத்தொலைபேசி களவு போனால்

ஒரு நாள் என் நண்பண் தன் கைத்தொலைபேசி களவு போய் விட்டதாகவும். உலக கைத்தொலைபேசி அடையாள எண்ணை(IMEI - International Mobile Equipment Identify) வைத்து, அந்த தொலைபேசியை உபயோகபடுத்த முடியாதபடி ஏதும் செய்ய முடியுமா என்று கேட்டார். காணாமல் போனால் விடு, அடுத்தவனாவது அதனை பாவிக்கட்டுமே என்றேன் நான்.

நானாக தவற விட்டிருந்தால், அது என்னுடைய தவறு என்று விட்டிருப்பேன். ஆனால் இது என் வீட்டினுள் இருந்து களவு போனது. ஆதாலால் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். களவு போனது இந்தியாவில். எனக்கு அதை பற்றிய அறிவு எனக்கு இல்லை. நான் பதிவுலக நண்பர்களிடம் கேட்கிறேன், நிச்சயமாக உனக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லி நம் பதிலக நண்பர்களின் நன்மதிப்பை காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

கோவி.கண்ணன் said...

//IMEI - International Mobile Equipment Identify//

இது ஒரு தனித்த எண் ஒவ்வொரு கைபேசிக்கும் ஒவ்வொரு எண் இருக்கும், அதே எண் வேறு கைபேசிக்கு இருக்காது.

இதை வைத்து கேபேசி பயன்பாட்டை நிறுத்த முடியாது.

இங்கே சிங்கையில் அந்த எண்னை குறித்து வைத்திருந்து அதன் பிறகு தொலைந்து போய் இருந்தால் கைபேசி பழுதுபார்ர்கும் சேவை நிலையங்களுக்கு அந்த எண்ணை தெரிவித்தால், அந்த கைபேசி ஒருவேளை பழுதுபார்பதற்காக கொண்டுவந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

இது போன்று கைபேசி கண்டுபிடிக்கப்பட்டாலும் எடுத்தவரே வெளிமார்கெட்டில் இரண்டாம் விற்பனையில் (செகண்ட் ஹேண்ட்) வாங்கினேன் என்று சொல்லிவிட்டால் கைபேசியை அவரிடமிருந்து வாங்க முடிந்தாலும் அவர் மீது நடவெடிக்கை எடுக்க முடியாது.

இதை எப்படி உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா ?

சிங்கை முழுவதும் இருக்கும் நோக்கியா, சாம்சங் சேவை நிலையங்களை நான் பணி புரிந்த முன்னால் நிறுவனம் ஒன்றுதான் ஒப்பந்த அடிப்படையில் வைத்திருந்தது. அந்த சேவை நிலையங்களுக்கு அடிக்கடி பணித் தொடர்பில் சென்று இருக்கிறேன். தொலைந்த கைபேசிகளைப் பற்றி புகார் கொடுப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இக்பால் said...

நன்றி கோவி.கண்ணன்,
தங்களின் விரைவான ஆலோசனைக்கு.

மேலும் நிச்சயம் நாம் சந்திப்போம், விரைவில்...

nedun said...

An IMEI number-The International Mobile Equipment Identity (IMEI) number is an international identity number used to uniquely identify a mobile phone. The 15-digit IMEI number is an electronic fingerprint transmitted every time a phone is used, which reveals the identity of the mobile handset.

How can I find out my IMEI number? IMEI numbers are independent of the phone number and are usually written underneath the battery or on the back of the handset. Mobile phone users can also check their 15 digit IMEI number by dialling *#06# on their mobile handset. Mobile phone owners should make a note of their IMEI number and keep the details in a safe place.

If u lost your mobile, send an e-mail to cop@vsnl.net with the following info.



Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

"No need to go to police station"

Source: THE HINDU, 13.5.06

இக்பால் said...

நன்றி Nedun
தங்களின் ஆலோசனைக்கு.

Anonymous said...

very goodposting