Wednesday, November 19, 2008

நகைச்சுவை

நான் ரசித்த சிரிப்புகளை நம்ம மக்களும் படித்து மகிழ இந்த பதிவு.

அம்மா ஒரு பையன்கிட்ட மாவு அரைக்க சொன்னாங்க. ஆனா அவன் பதுங்கி, பதுங்கி போனான். ஏன் தெரியுமா?
ஏன்னா அவன் அம்மா, மாவை நைசா அரைக்க சொன்னாங்க அதான்.



இரண்டு பாகிஸ்தானியும், இரு இந்தியனும் கிரிக்கெட் மேட்ச் பார்க்க சென்றார்கள். புகைவண்டியில் பயணம் செய்வதற்கு பாகிஸ்தானியர்கள் இரு பயணச் சீட்டு வாங்கினார்கள். ஆனால் நம்ம ஆட்கள் ஒரு பயணச் சீட்டு வாங்கினார்கள். அப்போது பாகிஸ்தானி எப்படி?? என்றான்.
அதற்கு நம்ம ஆள் பொருத்திருந்து பார் என்றான்.
புகைவண்டியில் ஏறியவுடன் நம்ம ஆட்கள் டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டனர். பயண பரிசோதகர் கதவை தட்டி கேட்டவுடன், கையை மட்டும் நீட்டி பயண சீட்டை காட்டினான். அவர் சரி என்று சென்று விட்டார். விளையாட்டு முடிந்து வரும்போது பாகிஸ்தானியர்கள் ஒரு சீட்டு வாங்கினார்கள். ஆனல் நம்ம ஆட்கள் பயணச்சீட்டே வாங்க வில்லை. அப்போது பாகிஸ்தானி எப்படி?? என்றான், அதற்கு நம்ம ஆள் பொருத்திருந்து பார் என்றான்.
புகைவண்டி வந்தவுடன் பாகிஸ்தானியர்கள் இருவரும் டாய்லட்டுக்குள் புகுந்து கொண்டனர். நம்ம ஆட்களும் வேரொரு டாய்லெட்டுக்குள் புகுந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து நம்ம ஆள் ஒருத்தன் மட்டும் வெளியில் வந்து, பாகிஸ்தானியர்கள் இருந்த டாய்லேட் கதவை தட்டி Ticket Please.... என்றார். உடனே அவன் கையை நீட்டி பயணச் சீட்டை காட்டினான். உடனே நம்ம ஆள் அந்த சீட்டை வாங்கி, எடுத்து வட்டு வந்து அவன் டாய்லெட்டுகுள் புகுந்துக் கொண்டான்.

Sunday, August 31, 2008

சக்கரா குடியேற்றல் ஆலோசனை நிறுவனம்

நான் (Work permit) எனப்படும் வேலை அனுமதி சீட்டில் இருப்பதால் என்னால் குடும்பத்தை சிங்கைக்கு கொண்டு வர இயலவில்லை. எனது நிறுவனமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குடும்மத்தோடு இருக்க வேண்டும், ஓன்று இந்தியாவில் அல்லது? அப்போது நண்பர்கள் உதவியோடு அறிமுகமனதுதான் ஆஸ்திரேலியாவில் குடியேறுதல். ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு உலகெங்கும் நிறைய முகவர்கள் இருந்தாலும், ஒவ்வொருத்தருக்கும் இடையே கட்டணத்தில் மாறுபாடு உள்ளது. நான் தேர்ந்தெடுத்தது தமிழகத்தின் தஞ்சையில் உள்ள சக்கரா குடியேற்றல் ஆலோசனை நிறுவனம். இது அரசாங்கத்தால் பதிவு பெற்றது. மேலும் நியாயமான கட்டணம். இம்முயற்சியை ஆரம்பித்தது 2006ல் நவம்பரில். ஆனால் ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒப்புதல் கொடுத்தது 2008 ஆகஸ்ட் மாதத்தில். இந்த இரண்டு வருடம் என்பது நீண்ட இடைவெளி என்பது ஆஸ்திரேலியா அரசாங்க குடிநுழைவு துறையில் அதிகமான விண்ணப்பங்களால் ஏற்பட்டது. இப்பதிவின் மூலம் திரு. முருகன் (சக்கரா நிறுவனத்தின் இயக்குநர்) அவர்களுக்கு எனது நன்றியினையும், சக்கரா நிறுவனத்திற்கு எனது நற்சான்றினையும் வழங்குகிறேன்.

அவர்களது  இணைய முகவ்ரி

சக்கரா குடியேற்றல் ஆலோசனை நிறுவனம்

கட்டண விபரம்

Thursday, August 28, 2008

கைத்தொலைபேசி களவு போனால்

ஒரு நாள் என் நண்பண் தன் கைத்தொலைபேசி களவு போய் விட்டதாகவும். உலக கைத்தொலைபேசி அடையாள எண்ணை(IMEI - International Mobile Equipment Identify) வைத்து, அந்த தொலைபேசியை உபயோகபடுத்த முடியாதபடி ஏதும் செய்ய முடியுமா என்று கேட்டார். காணாமல் போனால் விடு, அடுத்தவனாவது அதனை பாவிக்கட்டுமே என்றேன் நான்.

நானாக தவற விட்டிருந்தால், அது என்னுடைய தவறு என்று விட்டிருப்பேன். ஆனால் இது என் வீட்டினுள் இருந்து களவு போனது. ஆதாலால் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். களவு போனது இந்தியாவில். எனக்கு அதை பற்றிய அறிவு எனக்கு இல்லை. நான் பதிவுலக நண்பர்களிடம் கேட்கிறேன், நிச்சயமாக உனக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லி நம் பதிலக நண்பர்களின் நன்மதிப்பை காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 13, 2008

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள்


நாம் சிலரை பார்த்திருப்போம் நம்முடன் பேசிக்கொண்டே, அவர்களின் விரல்கள் தட்டச்சுப்பலகையின் மேல் மின்னல்வேகத்தில் சுழன்றடிக்கும் அதேவேளையில் திரையில் காரியம் முடிந்திருக்கும். வியப்பாய் நாம் பார்த்துக்கொண்டு நிற்போம். மூன்று நிமிடத்தில் நாம் செய்வதை அவர் மூன்றே நொடியில் செய்து முடிப்பார். எல்லாம் தட்டச்சு குறுக்கு வழிகளின் உபயம் தான். நிங்களும் இந்த தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகளை தெரிந்து வைத்திருந்து அதை அவ்வப்போது பழக்கப்படுத்தி வந்தால் மற்றவர் வியக்கும் அளவிற்கு நீங்களும் கணிணியில் புகுந்து விளையாடலாம்.

உதவி குறிப்புகள்:
ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com ,
just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net ,
just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org ,
just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl-லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3 அழுத்தினால் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift-ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.
shift-ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்
... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

இப்படி ஒவ்வொன்றாய் முயன்றுபாருங்கள் எல்லாமே சாத்தியம்தான் . சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.

சில உபயோகமான இணைப்புகள்

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள்

Saturday, June 7, 2008

நாட்டாமை தீர்ப்பை மாத்தி எழுது

ஒரு ஊரில் 60 வயதான பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பிள்ளைகள் இல்லை. ஒரு நாள் அவருடைய மனைவி இறந்து விட்டாள். காரியங்கள் எல்லாம் முடிந்தது. அவர் தனிமையில் இருந்ததால் அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து அவருக்கு துணைக்கு ஒருவர் வேண்டும் என்று சொல்லி ஒரு 20 வயது பெண்ணை திருமணம் பண்ணி வைத்தார்கள். அவர்களுக்கு அடுத்த வருடதிதிலே ஒரு குழந்தையும் பிறந்தது.(எப்படின்னு கேக்காதிங்க). சிறிது நாட்களுக்கு பிறகு அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு, பிரிந்து வாழவது என்று முடிவு செய்து நீதிமன்றம் சென்றார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அவர்கள் பிரிந்து வாழ தீர்ப்பு வழங்கியது. இப்போது பிரச்சனை குழந்தை யாரிடம் வளர்வது என்று?.
அந்த பெண்ணோ அவளின் வயதை கணக்கில் கொண்டு குழந்தை தன்னிடம் இருந்தால்தான் பாதுகாப்பாகவும் நன்றாகவும் வளரும் என்று கூறுகிறாள். அந்த பெரியவரோ, தன் செல்வத்தை கணக்கில் கொண்டு குழந்தை தன்னிடம் இருந்தால்தான் பாதுகாப்பாக வளரும் என்கிறார். நீதிபதிக்கோ குழப்பம்!
அப்போது அந்த பெரியர் நான் ஒரு குட்டி கதை கூறுகிறேன், அதற்கு பின் நீங்கள் தீர்ப்பு கூறுங்கள் என்றார்.
நான் 5 ரூபாய் நாணயத்தை எடுத்து தானியங்கி தேனீர் வழங்கும் இயந்திரத்தில் போடுகிறேன். அது பேப்பர் குவளையில் தேநீரும் வழங்கியது. இப்போது அந்த தேநீர் எனக்கு சொந்தமா அல்லது அந்த இயந்திரத்திற்கு சொந்தமா? இதற்குமேல் தாங்கள் தீர்ப்பு கூறுங்கள் என்றார்.
இது எப்படி இருக்கு!!
நீதிபதி என்ன தீர்ப்பு கூறியிருப்பார்ன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

Monday, May 19, 2008

சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல்

முன்பெல்லாம் இந்திய வங்கிகளுக்கு பணம் அனுப்ப ராபில்ஸ் பிலேஸுக்குதான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது பரவாயில்லை, ரெமிட்டன்ஸ் சென்டர் திறந்து சேவை பண்ணி கொண்டிருக்கிறார்கள். இது ஓரளவிற்கு பாரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் பணம் அனுப்புவதற்காக விடுமுறை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஆன்லைனில் பணம் அனுப்பும் முறையினால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இது ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கிகள் டிபிஸ் வங்கியுடன் இணைந்து இச்சேவையை வழங்கி வருகிறது. கடந்த வருடத்திலிருந்து நமது இந்தியன் வங்கியும் இச்சேவையும் டிபிஸ் வங்கியுடன் இணைந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் முறையை வழங்கி வருகிறது.

ஐசிஐசிஐ மற்றும் HDFC வங்கிகளில் பதிவு செய்வது சுலபம். வீட்டிலிருந்தே பதிவு செய்து பணம் அனுப்பி கொள்ளலாம். ஆனால் நமது இந்தியன் வங்கிகளில் பதிவு செய்வது என்பது கடவுசீட்டு வாங்குவதற்கு சமமானது. நேரடியாக சென்று பாரம் பூர்த்தி செய்து, புகைபடத்தையும் ஒட்டி கொடுத்தால்தான் அடையாள பெயரையும், கடவு சொல்லையும் கொடுப்பர்கள். இப்போது இந்தியன் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் பணம் அனுப்ப 6 வெள்ளி கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் HDFCயில் 250 வெள்ளிக்குமேல் பணம் அனுப்ப கூடுதலாக வெள்ளி கொடுக்க வேண்டியதில்லை.

ஒர் சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இந்தியன் வங்க்கிகும் HDFC மூலம் பணம் அனுப்ப முடியும்.

Thursday, March 13, 2008

கணவன் மனைவியின் கலக்கல் காமெடி

மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல.
மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப
நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.

மனைவி : உங்களுக்கு இரவு உணவு வேணுமா??
கணவன் : நிச்சயமா... என்னுடைய சாய்ஸ் என்ன?
மனைவி : ம்ம்.. வேணும் அல்லது வேண்டாம்.

மனைவி : என்னிடம் உங்களுக்கு பிடித்தது எது? என் அழகான முகமா? அல்லது எனது
கவர்ச்சியான உடலா?
கணவன் : சிறிது நேரம் தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு........ எனக்கு உன்னிடத்தில்
பிடித்தது உன் நகைச்சுவை உணர்வுதான்...