Saturday, December 29, 2007

வேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது.

சில டிப்ஸ்.....
ஒரு அறையில் நூறு செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அழகாக அடுக்கி வைக்கவும். பின்னர் நேர்முக தேர்வுக்கு வந்துள்ள ஆட்களில், மூன்று அல்லது நான்கு ஆட்களை அந்த அறைக்கு அனுப்பி விடவும். ஒரு ஆறு மணி நேரம் கழித்து வந்து, அவர்களின் செய்கைகளை வைத்து ஆட்களை தேர்ந்தெடுக்கவும்.
1. செங்கற்களை சரியாக எண்ணியவர்களை கணக்கியல் துறைக்கு அனுப்பவும்.
2. மீண்டும் மீண்டும் எண்ணுபர்களை கணக்காய்வு துறைக்கு அனுப்பவும்
3. கற்களை மாற்றி மாற்றி வைத்திருபவர்களை தொழில்நுட்ப துறைக்கு அனுப்பவும்.
4. வித்தியாசமான முறையில் மாற்றி அடுக்கி வைத்திருப்பவ்ர்களை வியாபார முன்னேற்றத்துறைக்கு அனுப்பவும்.
5. ஒருத்தர்மேல் ஒருத்தர் கல்லை எறிந்துகொண்டு இருந்தால் செயல்துறைக்கு (Operations) அனுப்பவும்.
6. தூங்கி கொண்டு இருந்தால் பாதுகாப்பு துறைக்கு அனுப்பவும்.
7. கற்களை பல துண்டுகளாக உடைத்துக் கொண்டு இருந்தால் கணிணி துறைக்கு அனுப்பவும்.
8. ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தால் மனிதவள துறைக்கு அனுப்பவும்.
9. வித்தியாசமான முறையில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஒரு கல்லையும் மாற்றாமல் இருப்பவர்களை விற்பனை பிரிவுக்கு அனுப்பவும்.
10. கடைசியாய் ஒன்றுமே செய்யாமல் எந்த ஒரு கல்லையும் மாற்றி வைக்காமல் சும்மா உட்கார்ந்து பேசிகொண்டு இருந்தால் அவர்களை வாழ்த்தி உயரதிகாரியாய் வைக்கவும்.
என்ன நண்பர்களே தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் புதிதாய் நிறுவனம் ஆரம்பிக்கும்போது உஙகளுக்கு உபயோகமாய் இருக்கும்.

Friday, December 28, 2007

நச்சென ஒரு கதை

நல்லார் ஒருவர் உளரேல்என அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
கோட்டக்குப்பம் ஒரு அழகான கடற்கரை கிராமம். அந்த கிராமத்தில பல இன மக்களும் ஒன்றாக வசித்து வந்தாங்க. ஒரு நாள் சரியான மழை. மழைன்னா உங்க வீட்டு, எங்க வீட்டு மழை இல்ல, பேய் மழைன்னு சொல்வாங்கலே அது மாதிரி. ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காட இருக்கு. தண்டோர போட்டு எல்லோரையும் ஊர் மண்டபத்தில கூட சொன்னாங்க. ஏன்னா அதான் ஊர்லயே மேடான பகுதி, மேலும் இத மாதிரி காலகட்டத்தில இங்கதான் வந்து தங்குவாங்கா. அப்புறம் மழை நின்ன உடனே அவங்க அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. ஆனா இந்த தடவ மூனு நாலாகியும் மழை விடவேயில்லை. ஒரே இடி மின்னலுமா இருக்கு. அப்போ ஒரு பெருசு சொல்லிச்சு, இடி, மின்னல் எல்லாம் கெட்டவங்கல அழிப்பதற்காக ஆண்டவனால உருவாக்கப்படறது. இப்ப நாம எல்லோரும் ஒன்னா கூடியிருக்கிறோம். யாரவது ஒருத்தன் தப்பு பண்ணவன் இருந்தாகூட இடி இங்க விழுந்து நாம எல்லோரும் செத்து போயிருவோம். அதானால ஒருத்தன் ஒருத்தனா போய், அங்கவுள்ள பனை மரத்தை தொட்டுட்டு வாங்க, எவன் தப்பு பண்ணானோ அவன்மேல இடி விழுந்திடும், மத்தவங்கெலெல்லாம் தப்பிச்சிக்கிலாம்னு அப்பிடின்னார். சரின்னு சொல்லி ஒவ்வொருத்தனா போய் பனைமரத்த தொட்டுட்டு வந்தாங்க, ஒன்னுமே ஆவல, கடைசியா ஒருத்தந்தான் பாக்கி. அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்திருச்சி. பயந்திகிட்டே போய் கண்ண மூடிக்கிட்டு பனைமரத்த தொட்டான். தொட்ட உடனே ஒரு பயங்கரமான இடி. கண்ண திறந்தான். அவனுக்கு ஒன்னும் ஆவல. அப்பாடான்னு திரும்பி பார்த்தான். அஙக பார்த்தா மண்டபத்து மேல இடி விழிந்து எல்லாம் செத்திட்டாங்க. அப்பதாங்க மேல சொன்ன திருக்குறல் எனக்கு ஞாபகம் வந்திச்சிங்க.

Tuesday, December 25, 2007

முதியோரைப் பற்றிய எண்ண கிறுக்கல்கள்

நம்மை உருவக்கியவர்கள் நம் மூத்தோர்கள். அவர்கள் நிழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நிலை?.. ஓரளவு திட்டமிட்டவர்கள் சிலபல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுகின்றனர். ஆனால் சாதரண, நிரந்தர வருமானம் இல்லாதவர்களின் நிலைதான் மிகவும் பரிதாபம்.
முன்னர் கூட்டு குடும்பமாக இருந்தபோது இத்தைகைய பிரச்சனைகள் குறைவாக இருந்தது.அவர்களின் பிரச்சனைகள் அவ்வப்போது ஆராயப்பட்டு தீர்க்கப்பட்டன. மேலும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் எப்படியும் வீட்டோடு இருந்ததால் அவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் இன்றைய கலாச்சார யுகத்தில் தேவைகள் அதிகரித்து வருவதால் அதிக வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் உள்ளனர்.இதனால் இளைய சமுக தலைமுறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இதனால் முதியர்களின் தேவைகளை அறிந்து உதவும் மனப்போக்கு குறைந்து வருகிறது.
இது, தாங்கள் தனித்து விடப்படுகிறமோ என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக கசப்பு உண்ர்வு பெருகி இரு தரப்பையும் பாதிக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளை மற்றவர்கள் அவ்வளவாக பொருட்படுத்தாத போக்கும் பெருகி வருகிறது. இதனால் புதுபுது பிரச்சனைகள் உருவாகி அவர்களுக்கிடையே இடைவெளி அதிகரித்து ஏறக்குறைய அனாதை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இத்தைகைய சூழ்நிலையில் முதியோரை காக்க வேண்டிய பொறுப்பு மக்கள் நல அரசுக்கு வேண்டும். அவர்களுக்கு நிதி உதவி மட்டுமின்றி சுகாதார மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டியது தரவேண்டியது அரசின் முக்கிய பொருப்பகும். அரசின் உதவி சரியான நபருக்கு செல்கிறதா, ஆட்கள் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்களா என்பதையும் அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

Thursday, December 13, 2007

காலன் சுனாமி!!

கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நடந்த சோக நிகழ்சியை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். அத்துர்சம்பவத்தில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திர்காக என் மலையாள நண்பர் திரு.அகஸ்டின் பெட்டேயல் அவர்கள் மலையாலத்தில் எழுதிய இக்கவிதயை தமிழில் மொழி பெயர்த்து காணிக்கையாக்குறேன்.

காணாமல் இருந்து நான்
கண்டது என் விழிகள்
என்னையறியாமல்
என் இமைகள் நனைந்தன

நான் பார்க்காத ஏதோ உலகம்போல
அறியாத ஒரு நிசப்தம்
கனத்த பயமுடன்
உலகத்தை விழுங்கவரும்
காலனைப் போல்

நான் கண்டேன் கடலின் அலைகளை
அம்பெய்தபோல் மிக வேகமாக
வந்ததே சுனாமி!

என் கடற்தாயே!
மாரில் மிதித்து எம்மக்களை
ஆழியில் அமிழ்த்தினாயே
உன் சக்தியை மக்கள் அறிவாரோ?

நீ எங்கள் எமன்னானது
வாழ்வில் மறக்க முடியாதது
காலன் சுனாமியே!!

என் வாழ்வில் என்று நினைத்தாலும்
என் விழிகள் நனையும்,
பூக்களாய் சொறியும்
இறந்தவர்களின்
ஆத்ம சாந்திர்க்காக....

இக்கவிதயை படித்தபின் இவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுதுவீர்களாக.

Sunday, December 9, 2007

நெஞ்சு பொருக்கதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

நீதிமன்றங்களின் நேரம் எவ்வளவு அதி முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கம் எண்ணிலடங்கா. இந்தியாவிலுள்ள ஜார்கண்ட் மாநில நீதிபதி ஒருவர் இந்துக் கடவுள்களான ராமருக்கும் அனுமனுக்கும், சொத்து விவகாரம் ஒன்றில் சாட்சி சொல்ல நீதிமன்ற அழைப்பானை அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல, நீதிபதி சுனில்குமர்சிங், அதற்காகச் செய்திதாள்களிலும் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். நீதிமன்ற ஊழியர் வழியாகவும் பிறகு பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பிய அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்திற்கு வர தவறி விட்டீர்கள், ஆதலால் இருவரும் உடனடியாக நீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிமன்றத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். ராமரையும் அனுமனையும் நீதிமன்றத்தின் முன்பு தோன்றும்படி அந்த விளம்பரத்தில் கேட்டிருந்தார். செவ்வாய் கிழமையன்று அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜராயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வராததால் அவர்களுக்கு அனுப்பட்ட அழைப்பானை முகவரி இல்லாமல் திரும்பி வந்ததாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.தான்பட் நகரின் துரித நீதிமன்ற நீதிபத்தான் அவர். ராமர் மற்றும் அனுமன் ஆலயங்கள் அமைந்திருக்கும் 1.4 ஏக்கர் நிலம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார் கோயில் பூசாரி மன்மோகன்பகத், ஆனால் ஊர் மக்களோ நிலம் கோயிலுக்கு சொந்தம் என்று சொல்கின்றனர். இதற்காத்தான் இதை செய்திருக்கிறார்.

நன்றி - தமிழ்முரசு - சிங்கை

பாமரனுக்கும் தெரியும் கடவுள் நேரில் வருவதயிருந்தால் எண்ணிலடங்கா வழக்குகளுக்கு நீதிமன்றபடி ஏறவே தேவையில்லை என்று. ஆனால் படித்த, மிக உயர்ந்த இடத்தில் உள்ள, ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் நாம் தீர்ப்பின் மூலம் தண்டிக்கும் உரிமையை வழங்கியிருகிறோம். அப்படிபட்டவர் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீண்டித்து கேளீக்கூத்து செய்தியிருக்கிறார். என் ஆதங்கத்தினால் இந்த பதிவு. உங்களின் கருத்துகளை பதியுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

Friday, December 7, 2007

வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு, போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு

நம்மாலு ஒருத்தன் கிட்ட போய் கேட்டேன், வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு, போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு, அப்படின்னு தமிழ்ல பேச்சு வழக்குல சொல்ராங்கலே அப்படின்னா என்னான்னு கேட்டென்.
அவன் சொன்னான் எந்த வேலையுமெ கிடைக்காதவன் வாத்தியார் வேலைக்குதான் போகனும் அப்டின்னான்.அவன் எத வச்சி சொன்னான்ன, அந்த காலத்தில வாத்தியார் வேலை ஒரு சமூக பணியாகத்தான் செய்தாங்க.ஏன் அந்த காலம், கலைஞர் கடந்த ஆட்சியில ஆசிரியர்களுக்கு சம்பளம் எற்றும் வரை, வாத்தியார்ன பொண்ணு குடுக்ககூட மக்கள் யோசிச்சாங்க. நம்ம ஆளு அதவச்சிதான் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்.

ஆனால் சரியான வாக்கியம் என்னான்னா வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு. நன்றாக படித்து, நன்றாக சொல்லித் தரும் திறமையினை கற்றவந்தான் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்பதுதான் மருவி விட்டது.

சரி போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு அப்படின்னா?? கேட்டேன்.அடாவடிய எதற்கும், யாருக்கும் பயப்படாம இருக்கறவனும் மேலும் "போக்கு" என்றால் இடம் இருக்க இடம் இல்லாதவந்தான் போலீஸ் வேலைக்கு போகனும்.சுருக்கமா சொல்லனும்னா எதற்கும் துணிஞ்சவந்தான் இந்த வேலைக்கு சரியானவன் என்று பொருள் அர்தத்தோட சொன்னான்.

நான் சொன்னேன், தம்பி அப்படியில்ல,மனிதர்களின் மனப்போக்கினைக் கற்றவன், போலீஸ் வேலைக்கு போகவேண்டும் - ஏனனெனில், அவனுக்கு திருடர்களின் மனப்பாங்கும் சாமானியனின் மனப்பாங்கும் நன்கு தெரிந்து இருக்கும். இது திரிந்து இப்போது இந்த முட்டாள்தனமான உருமாற்றத்துடன் வழங்கப் படுகின்றது.

என்னங்க ஐயா! நான் சொல்றது சரிதானே? தவறா இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்

Tuesday, December 4, 2007

நொங்கு தின்னவன் ஒடிட்டான், நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டான். அப்படின்னு தமிழ்ல ஒரு பழமொழி இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அது மாதிரி ஒரு நிகழ்வு சமீபத்தில எனக்கு ஏற்பட்டுச்சு. என் நன்பன் புதுச இப்பதான் சிங்கப்பூருக்கு வந்திருக்கான். சரி அவனக்கு நாலு இடம் சுத்தி காண்பிபோம்னு சின்ன இந்தியாவுக்கு கூட்டிட்டுப்போனேன். அந்த இடத்த பார்த்த உடனே ரொம்ப சந்தோசப் பட்டு சொன்னான், நான் என்னமோ இங்க எல்லோரும் ஆங்கிலத்திலதான் பேசுவங்கான்னு பயந்துகிட்டே வந்தேன் இங்க வந்து பார்த்தா ஒன்னுமே வித்தியசமே தெரியலெயே, எங்க பார்த்தாலும் தமிழ்ல பெயர்பலகை, தமிழ்நாட்டு மனிதர்கள்ன்னு ரொம்ப சந்தோசப்பட்டான். சரி அவன அப்பிடியே ராஃபில் பிலெஸ், ஆர்ச்சார்ட் சாலைக்கு கூட்டிகின்னு போனேன். இந்தியன் வங்கிய காண்பிச்சிட்டு, அப்ப்டியே சுத்திக்கிண்ணு படகு குழாம்க்கு வந்தோம். அவனுக்கு ரொம்ப சந்தோசம், சிங்கப்பூர் ரொம்ப அழகா சுத்தமா இருக்குன்னு சொன்னான். நான் சொன்னேன், சிங்கப்பூர்ல உள்ளவங்கெல்லாம் சட்டத்திற்கு ரொம்ப கட்டு பட்டவங்க. இந்த பக்கம் போக கூடாதுன்னு சொன்னா போக மாட்டாங்க, அதே மாதிரி குப்பையை கீழ போடக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லிருக்கு, அது மட்டுமில்ல குப்பை கீழ இருந்தாகூட அத எடுத்து குப்பை தொட்டில போட்டுடுவாங்க, அதான் சுத்தமயிருக்குன்னு நான் சொன்னேன். அந்த சமயம்பார்த்து ஒருத்தன் (சிங்கபூர்காரந்தான்) பிஸ்கட்ட சாப்பிட்டு காகிதத்தை தூக்கி போட்டுட்டு போனான். நம்மாலு என்ன ஒரு மாதிரியா பார்த்தான் பாருங்க!!. சரி நாம சொன்னத செய்வோம் அப்பிடின்னு அத எடுத்து குப்பை தொட்டியில போடாலாம்னு எடுத்துட்டு நிமிர்ந்தேன்,அது என்னான்னா என் கையில இருந்து பறந்து கீழே போய் விழுந்தது. அந்த சமயம் பார்த்து ஒரு காவல்துறை நண்பன் வந்தாரு, அவரு பார்த்துட்டு நம்மல அபராதம் கட்டுடா சொல்லிட்டான். நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ம்ம்.. அவன் கேட்கிற மாதிரி இல்ல, இந்த குப்பையை நீதான் கீழே போட்டேன்ன்னுட்டான். அந்த சமத்தில நம்ம ஆளு ஒரு பார்வை பார்த்தான் பருங்க!!!. கடைசியா அவன் சொன்னன், இங்குள்ளவங்கெல்லாம் சட்டதிற்கு பயப்படல, அபராதத்திற்குதான் பயப்படராங்கன்னு அப்படின்னு சொல்லிட்டு இந்த பழமொழிய சொன்னாங்க. ஹி..ஹி.... ,

Monday, December 3, 2007

பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் கலம்
இவ்வகை கப்பல்கள் பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றி செல்வதற்கென்றே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டது. இவ்வகை கப்பல்கள் பொருட்கள் ஏற்றி செல்லும் இடம் பல பொருட்களை ஏற்றி செல்வத்ற்கு வசதியக பல அடுக்குகளையும், குளிரூட்டப்பட்டும் இருக்கும்.
உதாரணம் : இறைச்சி,பழங்கள், பால் பொருட்கள் மற்றும் பல... பொருட்களின் மதிப்பை மனதில் கொண்டு இவ்வகை கப்பல்கள் மிகப் பெரிதாகவும், வேகமாக செல்லும்படியாகவும் வடிவமைக்கப்படுகிறது.


இயற்கை வாயு மற்றும் திரவ பெட்ரோலிய வாயு ஏற்றிச் செல்லும் கலம்
இவ்வகை கப்பல்களின் பொருட்கள் ஏற்றும் பகுதியும் குளிரூட்டப்பட்டிருக்கும்.(வாயு உதாரணம் : மீத்தேன், பிரப்போன் மற்றும் பல..) இந்த கப்பல்களின் பொருட்கள் ஏற்றும் பகுதி உருளை அல்லது கோளம் வடிவத்தில் உஷ்ண கடத்தா பொருட்களை கொண்டு வடிவமைக்கப்ப்ட்டிருக்கும்.









Thursday, November 29, 2007

பல்க் கேரியர் - பொருட்களை மொத்தமாக எடுத்துச் செல்லும் கலம்
இந்த வகை கப்பல்கள் நிலக்கரி,தானியம்,உலோகம் மற்றும் தாதுப்பொருட்களை மொத்தமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. இந்த வகை கப்பல்களில் அடிப்பாகத்தில் டக்கீல் எனப்படும் நீண்ட குருகிய பாதை கப்பலின் முன்பாகத்திலிருந்து இயந்திர அறை வரை இருக்கும்.இதன் வழியாகத்தான் எண்ணெய் மற்றும் தண்ணீர் நிரப்பும் குழாய் ஆகியவை செல்லும்.





ரோரோ மற்றும் சொகுசு ஊர்தி ஏற்றி செல்லும் கலம்.
இந்த வகை கப்பலின் முகிகியமான உபயோகம், சக்கர வசதி உள்ள ஊர்தியை சொந்தமாக மேலே எற்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்த படுகிறது. கப்பலின் பின்பகுதியில் ரேம் எனப்படும் பாலம் போன்ற ஒரு பகுதி ஹைட்ராலிக் எண்ணெய் உதவியுடன் இயக்கப்படுகின்ற, இப்பாலத்தின் வழி தரையில் இருந்து ஊர்தியை உட்செலுத்துவார்கள்.

இக்கலத்திண் பயன்கள்: ஏற்றுதல் மற்றும் இற்க்குதல் மிக வேகமாக முடிவடையும்.


தீமைகள் : அதிகமான (கொள்ளளவு) இடத்தை பிடிக்கும்.


Sunday, November 25, 2007


இன்று எண்ணெய் ஏற்றும் கப்பலைப் பற்றி ஒரு சிறு குறிப்பு
இந்த வகை கப்பல்கள் எண்ணெய்,சுத்தமான பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ரசாயனம் போன்றவற்றை எடுத்த செல்ல பயன்படுகிறது. கப்பல்களை கட்டும்போதே எவ்வளவு பெரிதாக மற்றும் என்ன வகைப் பொருட்களை எடுத்த செல்ல பயன்படுத்தபட போகிறது என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றார்போல் வடிவமைப்பார்கள். இந்த வகைப் கப்பல்களில் எண்ணெய் கசிவின் ஆபத்தை தடுக்க காபர்டேம் என்று அழைக்கப்படும் வடிதட்டுகள் ஒவ்வொரு எண்ணெய் ஏற்றும் பகுதியில் குறைந்த பட்சம் 76மிமி அள்வுக்கு இருக்கும்.


மேலும் கட்டியான எண்ணெய் மற்றும் கருப்பு கட்டி (மொலஸ்ஸஸ்) போன்றவற்றை திரவமாக்க எல்லா எண்ணெய் ஏற்றும் பகுதிகளிலும் ஹீட்ட்ங் காயில் என்று அழைக்கப்படும் சூடு பண்ணும் கம்பி பொறுத்தப்பட்டிருக்கும். இதனால் எண்ணெய் மிக எளிதாக பம்பினால் உறிஞ்சப்பட்டு இடமாற்றம் செய்ய பயன்படுகிறது.

குறிப்பு: கப்பலை கட்டும்போது உலக கடல்சார் அமைப்பின் நெறிமுறைகளை மனதில் கொண்டு வடிவமைப்படுகிறது. எண்ணெய் மற்றும் எண்ணெய் கலந்த தண்ணீரை கடலில் கலப்பது குற்றமாகும்.




Friday, November 23, 2007

கப்பல்

பொது வணிக கப்பல்

இந்த கப்பல் பொதுவாக எல்லா வகையான பண்டங்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல உபயோகப்படுத்த படுகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த கப்பலில் பாரம்தூக்கி பயன்படுத்தப்பட்டது.


இந்த கப்பலில் பொருட்களை ஏற்றி செல்வதற்கு பெரிய பள்ளமான பகுதி (கார்கோ ஸ்டோரேஜ்) கனமான இரும்பால் (ஹேட்ச் கவர்) மூடப்பட்டிருக்கும்.


படம் கீழே




Thursday, November 22, 2007

கப்பல்

இந்த பதிவுல கப்பல பத்தி, ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லாம்னு நினைகிறேன். நான் ஒரு பத்து வருஷமா சிங்கப்பூர்ல கப்பற் பட்டரையில வேலை செய்துகிட்டிருக்கிறேன்.
கப்பல்ல பலவகை இருக்குங்க. அது என்னென்ன முதல்ல தெரிஞ்சிக்கலாம்.
1.பொது வணிக கப்பல்
2.கொல்கலம் (கண்டெய்னர்) கப்பல்
3.எண்ணெய் ஏற்றும் கப்பல் (டேங்கர்)
4.உல்லாச கப்பல் (பேசங்ஞ்சர்)
5.மீன்பிடி கப்பல்
6.திரவ பெட்ரோலிய வாயு கப்பல் (எல் பி ஜி)
7.இயற்கை வாயு கப்பல்(எல் என் ஜி)
என்று பல வகையான கப்பல்கள் உள்ளன். ஒவ்வொரு கப்பலும் எப்பிடி இருக்கும்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

படித்தில் பிடித்தது

நாகத்தின் நச்சு அதனை
தூற்றூவார்தூற்றிடினும்
நாகத்தின் நச்சு அதன்
கேடயம்போல் ஆயுதமே!

கிளிக்கு அலகுபோல!
காளைக்குப் கொம்புபோல!
மனிதனுக்கு பொய்போல!

நாகத்தின் நச்சு அதன்
கேடயம்போல் ஆயுதமே!!

Sunday, November 18, 2007

மனதை தொட்ட கவிதை

இழப்பதற்கு ஏது உண்டு உன்னிடம் - உன் இளமையை தவிர?
உறக்கமா? ஓவர்டைம் என்னாவது?
விடுமுறையா? இருமடங்கு ஊதியமல்லவா?
நீ வியர்வை மட்டுமா சிந்தினாய்?
உன் குருதியும் இளமையும்சரிவர கலந்து
உணவிழந்து,உறக்கமிழந்து
என்னதான் ஈட்டினாய்.

மணமுடித்து மறுவாரம் நீ இங்கெ!
மனமுழுவதும் உன் நினைவுடன்
மனையாள் அங்கே
தொலைபேசி மணி
உங்களின் தாம்பத்ய சங்கீதம்!
தபால்காரர் தேவதூதர்.

இளமையை தனிமையில் நீயும்
அழுகையில் அவளும் செலவழித்து ஈட்டுவதென்ன?
"மன"முறிவுகளும்"
மண"முறிவும்தானே?
பிறந்த சிசுவின்
முகம் பார்க்க
கடிதன் மூலம் பிறவி பயன் பெறுவது

பெர்மிட் முடிந்து நேரில் பார்க்கும்போது!
அழுத குழந்தை
அரண்டு ஒதுங்கும் - யார்
இந்த மாமா? என்று
சகோதரி திருமணம் 'குறு'வட்டில்
அதுவும் பார்க்க கிடைப்பது நடுனிசியில்
ஓவர்டைம் கழிந்து
பார்த்தபின் உறக்கம் ஏது?
உந்தன் நினைவுகளால்.

இறப்புகளுக்கு இங்கிருந்தே இறுதிக்கடன்!
நேரில்சென்றால் ஏறும் கடன்
உன் உறவின் மதிப்பு இவ்வளவுதான்.
இதற்காகத்தான் ஆசைபட்டாயோ??

நண்பனே??

நன்றி : தமிழ் முரசு (சிங்கை)