Monday, March 3, 2008

அந்த மாதிரி கதை

எப்பவுமே சரிங்க தற்பெருமை கூடவே கூடாதுங்க. அதுவும் பெருசுங்களுக்கு இருக்கிற குசும்பே தனிதான். பெருமையை சிறுமையா ஆக்கிடுங்க.
ஒரு பூங்காவில மூன்று பெருசுங்க உட்கார்ந்து கதை அடிச்சிகிட்டு இருந்தாங்க. என்ன செய்யறது பொழுது போகனுமில்ல. அப்பிடியே பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு பெரிசு சொல்லிச்சு, எனக்கு இப்ப 50 வயாசுகுது. ஆனாலும் பாரு என் வைப்பாட்டி முழுகாம இருக்கான்னு சொல்லிச்சு. உடனே அடுத்த பெரிசு. இதென்ன பெரிய விஷயம் எனக்கு இப்ப 60வயாசாகுது, இருந்தாலும் என் பொண்டாட்டி இப்ப 5 மாதம் கர்ப்பம் அப்படின்னார்.
அப்ப மூனாவது பெருசு சொன்னார். நான் உங்களுகெல்லாம் ஒரு கதை சொல்றேன். அத கேட்டுட்டு உங்க திறமையின் பெருமையை நீங்க தெரிஞ்சிக்கிங்க .

நான் ஒரு காட்டு வழியா போகிட்டிருந்தேன். அழகான பூக்கள், மரங்கள் மற்றும் பறவைகள் பார்த்திகிட்டு என்னை மறந்து போய்கிட்டிருந்தேன். அப்ப ஒரு பறவையை பார்த்தேன். அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு. நான் உடனே விளையாட்டா என்னுடைய கைத்தடிய தூக்கி அத பார்த்து "டும்" அப்படின்னு சுடுவது மாதிரி செய்தேன். ஆனா உடனே அந்த கிளி மேலே இருந்து கீழ விழுந்திருச்சி. எனக்கு ஆச்சிரியம் தாங்கல. எப்படிடா நாம வெறும் கைத்தடிய தூக்கி காண்பிச்சேன் எப்படி கிளி செத்து கீழ விழுந்திருக்கும் அப்படின்னு திரும்பி பார்க்கிறேன். ஒருத்தன் நிஜமான துப்பாக்கி வைத்து சுட்டிருக்கிறான் அப்படின்னு சொன்னார். அத கேட்ட உடனே ரெண்டு பெருசுங்களும் கப்சிப்ன்னு ஆகிடுச்சிங்க. அந்த ரெண்டு பெருசுங்கலுக்கு புரிஞ்ச மாதிரி உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்.

5 comments:

Anonymous said...

அந்த மாதிரி கதைன்னு ஓடி வந்தேன் . பரவாயில்ல....

மங்களூர் சிவா said...

எனக்கு புரிஞ்சிரிச்சி :))

ச.பிரேம்குமார் said...

ஹி ஹி ஹி... சூப்ப‌ர‌ப்பு

நானும் புதுவைக்கார‌ன் தான் த‌லைவ‌ரே

இக்பால் said...

தங்கள் வரவுக்கு நன்றி எனதருமை ஊர்க்காரரே..

Anonymous said...

naasukkaana... comedy... very goodu