Monday, May 19, 2008

சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலம் இந்தியாவிற்கு பணம் அனுப்புதல்

முன்பெல்லாம் இந்திய வங்கிகளுக்கு பணம் அனுப்ப ராபில்ஸ் பிலேஸுக்குதான் செல்ல வேண்டும். ஆனால் இப்போது பரவாயில்லை, ரெமிட்டன்ஸ் சென்டர் திறந்து சேவை பண்ணி கொண்டிருக்கிறார்கள். இது ஓரளவிற்கு பாரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் பணம் அனுப்புவதற்காக விடுமுறை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் ஆன்லைனில் பணம் அனுப்பும் முறையினால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இது ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கிகள் டிபிஸ் வங்கியுடன் இணைந்து இச்சேவையை வழங்கி வருகிறது. கடந்த வருடத்திலிருந்து நமது இந்தியன் வங்கியும் இச்சேவையும் டிபிஸ் வங்கியுடன் இணைந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் முறையை வழங்கி வருகிறது.

ஐசிஐசிஐ மற்றும் HDFC வங்கிகளில் பதிவு செய்வது சுலபம். வீட்டிலிருந்தே பதிவு செய்து பணம் அனுப்பி கொள்ளலாம். ஆனால் நமது இந்தியன் வங்கிகளில் பதிவு செய்வது என்பது கடவுசீட்டு வாங்குவதற்கு சமமானது. நேரடியாக சென்று பாரம் பூர்த்தி செய்து, புகைபடத்தையும் ஒட்டி கொடுத்தால்தான் அடையாள பெயரையும், கடவு சொல்லையும் கொடுப்பர்கள். இப்போது இந்தியன் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் பணம் அனுப்ப 6 வெள்ளி கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் HDFCயில் 250 வெள்ளிக்குமேல் பணம் அனுப்ப கூடுதலாக வெள்ளி கொடுக்க வேண்டியதில்லை.

ஒர் சிறப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இந்தியன் வங்க்கிகும் HDFC மூலம் பணம் அனுப்ப முடியும்.

11 comments:

வடுவூர் குமார் said...

நேற்று தான் இதைப்பற்றி எழுதினேன்.
சிங்கையில் இன்னும் ICICI இருக்கா?

வடுவூர் குமார் said...

இந்த முறையில் எவ்வளவு பணம் அனுப்பமுடியும்? DBS வங்கி அட்டையை உபயோகிக்க முடியுமா என்ற விபரங்கள் என் கண்ணுக்கு தென்படவில்லையே??

இக்பால் said...

ஐசிஐசிஐ மற்றும் HDFCயில் RS.1,00,000 வரை பணம் அனுப்பலாம். நீங்கள் உங்கள் DBஸ் வங்கியில் ஆன்லைன் பரிமாற்றத்தில் எவ்வளவு டெபிட் லிமிட் வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து.

வடுவூர் குமார் said...

அப்படியா இக்பால்
ICICI - க்கும் DBS க்கும் இன்னும் லின்க் உள்ளதா?
DBS வலைப்பக்கத்தில் ஏதாவது விபரம் இருக்கா என்று பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

DBS வங்கியில் பரிசீலித்த போது அங்கும் 500 வெள்ளிக்கு மேல் பிற வங்கிகளுக்கு அனுமதியில்லை என்று உள்ளது.ஆதாவது ibanking.

இக்பால் said...
This comment has been removed by the author.
இக்பால் said...

நீங்கள் முதலில் icici bank websiteல் money 2 indiaவை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கு user ID & PASSWORD கிடைக்கும். அதன் வழியாக log in செய்து பணத்தை அனுப்புவதர்க்கு விவரங்களை கொடுங்கள். முடிவில் refernce No. கொடுக்கும். அதனை வைத்து dbs bank - bill payment வழியாக பணத்தை அனுப்பலாம்.
Debit Limit - $5000.

Anonymous said...

ICICI மூலமாக இந்தியாவில் உள்ள ICICI கிளை ஒன்றுக்கு பணம் அனுப்புவதென்றால், SGD 2000 வரை உள்ள தொகைக்கு கூடுதலாக 'சேவைக் கட்டணம்' செலுத்த வேண்டியிருக்கும். 2001 வெள்ளி என்றால் தேவையில்லை.

Anonymous said...

மிகவும் சரி. ஆனால் 250 வெள்ளிக்கு மேல் பணம் அனுப்ப கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆனால் உங்களுக்கு கிடைக்கும் கன்வர்ஷன் ரேட் பாதகமானதாக இருக்கும்.
ஐசிஐசிஐ'ன் முஸ்தபா வரைவோலைதான் சிறந்தது.

இக்பால் said...

நான் அனுப்பிய வரையில் ICICIயை விட Quick Remit (HDFC) தான் நல்ல கன்வர்ஷன் ரேட் கொடுத்திருக்கிறது. இன்றைய பண பரிவர்த்தனை
ICICI - $1 - Rs.30.79
HDFC - $1 - Rs.30.81
$500 & ABOVE-Rs.30.90
ICICயில் அதற்கு மேலும் 5 வெள்ளி கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கும்.