Wednesday, August 13, 2008

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள்


நாம் சிலரை பார்த்திருப்போம் நம்முடன் பேசிக்கொண்டே, அவர்களின் விரல்கள் தட்டச்சுப்பலகையின் மேல் மின்னல்வேகத்தில் சுழன்றடிக்கும் அதேவேளையில் திரையில் காரியம் முடிந்திருக்கும். வியப்பாய் நாம் பார்த்துக்கொண்டு நிற்போம். மூன்று நிமிடத்தில் நாம் செய்வதை அவர் மூன்றே நொடியில் செய்து முடிப்பார். எல்லாம் தட்டச்சு குறுக்கு வழிகளின் உபயம் தான். நிங்களும் இந்த தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகளை தெரிந்து வைத்திருந்து அதை அவ்வப்போது பழக்கப்படுத்தி வந்தால் மற்றவர் வியக்கும் அளவிற்கு நீங்களும் கணிணியில் புகுந்து விளையாடலாம்.

உதவி குறிப்புகள்:
ஏதாவது .com என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.com ,
just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .net என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.net ,
just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .org என முடியும் தளம் போகவேண்டுமா? like www.yahoo.org ,
just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl-லை அழுத்தியவாறே a அழுத்தினால் அது அனைத்தையும் தெரிவு செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே c அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே x அழுத்தினால் அது தெரிவு செய்தவற்றை கட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே v அழுத்தினால் அது மேலே நீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்
Ctrl-லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt-ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள விண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ள எல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐ அழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3 அழுத்தினால் Find திறக்கும்.
F5 அழுத்தினால் refresh ஆகும்.
Alt-ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift-ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அது குறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.
shift-ஐ அழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அது குறிப்பிட்ட முழு பக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்
... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒரு புள்ளி டைப்பினால்)User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் L-வை தட்டினால் உங்கள் கணிணி லாக் ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐ தட்டி அப்புறம் U-வை தட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்.

இப்படி ஒவ்வொன்றாய் முயன்றுபாருங்கள் எல்லாமே சாத்தியம்தான் . சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்.

சில உபயோகமான இணைப்புகள்

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள்

8 comments:

கருப்பன் (A) Sundar said...

// Tab-ஐ தட்டுவது 8 spaces தட்டுவதற்கு சமானமாகும். //

இது முழுக்க முழுக்க எடிடர் செட்டிங்கை பொருத்தது, சில ஃபைல்கள் Tab-character க்கு பதிலாக Space பயன்படுத்தினால் இயங்காது உதாரணம் Makefile!!

// வின்டோஸ் கீ அழுத்தி U கீ அழுத்தினால் ஷட்டவுன் ஆப்ஷன் வரும் //

இது விஸ்டாவில் செயல்படாது. உங்கள் ஸ்டார்ட் மெனுவில் U என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது அப்ளிகேஷன் இருந்தாலும் இது உதவாது!

மஞ்சூர் ராசா said...

தகவல்களுக்கு நன்றி.

கண்ட் ரோல் + மவுஸ் ஸ்க்ராலர் மூலமாகவும் எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும் செய்யலாம்.

இக்பால் said...

நண்பர்கள் கருப்பன் மற்றும் மஞ்சூர் ராசா இருவருடைய அறிவுறுத்தலுக்கும், கருத்துக்கும் நன்றி .

Anonymous said...

தகவலுக்கு நன்றி

benza said...

வெகு பிரயோசனமான விஷயங்கள் ... நன்றி.
ஆமா winkey + L கு பின்னர் எப்படி ஓபன் செய்யிறது ?

Saranya said...

So nice to learn this useful information
Thank 'U'

Saranya said...

So nice to learn this useful information
Thank 'U'

Saranya said...

So nice to learn this useful information
Thank 'U'