Tuesday, December 4, 2007

நொங்கு தின்னவன் ஒடிட்டான், நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டான். அப்படின்னு தமிழ்ல ஒரு பழமொழி இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அது மாதிரி ஒரு நிகழ்வு சமீபத்தில எனக்கு ஏற்பட்டுச்சு. என் நன்பன் புதுச இப்பதான் சிங்கப்பூருக்கு வந்திருக்கான். சரி அவனக்கு நாலு இடம் சுத்தி காண்பிபோம்னு சின்ன இந்தியாவுக்கு கூட்டிட்டுப்போனேன். அந்த இடத்த பார்த்த உடனே ரொம்ப சந்தோசப் பட்டு சொன்னான், நான் என்னமோ இங்க எல்லோரும் ஆங்கிலத்திலதான் பேசுவங்கான்னு பயந்துகிட்டே வந்தேன் இங்க வந்து பார்த்தா ஒன்னுமே வித்தியசமே தெரியலெயே, எங்க பார்த்தாலும் தமிழ்ல பெயர்பலகை, தமிழ்நாட்டு மனிதர்கள்ன்னு ரொம்ப சந்தோசப்பட்டான். சரி அவன அப்பிடியே ராஃபில் பிலெஸ், ஆர்ச்சார்ட் சாலைக்கு கூட்டிகின்னு போனேன். இந்தியன் வங்கிய காண்பிச்சிட்டு, அப்ப்டியே சுத்திக்கிண்ணு படகு குழாம்க்கு வந்தோம். அவனுக்கு ரொம்ப சந்தோசம், சிங்கப்பூர் ரொம்ப அழகா சுத்தமா இருக்குன்னு சொன்னான். நான் சொன்னேன், சிங்கப்பூர்ல உள்ளவங்கெல்லாம் சட்டத்திற்கு ரொம்ப கட்டு பட்டவங்க. இந்த பக்கம் போக கூடாதுன்னு சொன்னா போக மாட்டாங்க, அதே மாதிரி குப்பையை கீழ போடக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லிருக்கு, அது மட்டுமில்ல குப்பை கீழ இருந்தாகூட அத எடுத்து குப்பை தொட்டில போட்டுடுவாங்க, அதான் சுத்தமயிருக்குன்னு நான் சொன்னேன். அந்த சமயம்பார்த்து ஒருத்தன் (சிங்கபூர்காரந்தான்) பிஸ்கட்ட சாப்பிட்டு காகிதத்தை தூக்கி போட்டுட்டு போனான். நம்மாலு என்ன ஒரு மாதிரியா பார்த்தான் பாருங்க!!. சரி நாம சொன்னத செய்வோம் அப்பிடின்னு அத எடுத்து குப்பை தொட்டியில போடாலாம்னு எடுத்துட்டு நிமிர்ந்தேன்,அது என்னான்னா என் கையில இருந்து பறந்து கீழே போய் விழுந்தது. அந்த சமயம் பார்த்து ஒரு காவல்துறை நண்பன் வந்தாரு, அவரு பார்த்துட்டு நம்மல அபராதம் கட்டுடா சொல்லிட்டான். நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ம்ம்.. அவன் கேட்கிற மாதிரி இல்ல, இந்த குப்பையை நீதான் கீழே போட்டேன்ன்னுட்டான். அந்த சமத்தில நம்ம ஆளு ஒரு பார்வை பார்த்தான் பருங்க!!!. கடைசியா அவன் சொன்னன், இங்குள்ளவங்கெல்லாம் சட்டதிற்கு பயப்படல, அபராதத்திற்குதான் பயப்படராங்கன்னு அப்படின்னு சொல்லிட்டு இந்த பழமொழிய சொன்னாங்க. ஹி..ஹி.... ,

4 comments:

Baby Pavan said...

அங்கிள் எனக்கு மட்டும் ஏன் எல்லாம் இரண்டு இரண்டா தெரியுது, கொஞ்சம் பாருங்க....

Baby Pavan said...

நான் ஒருத்தன் தான் எல்லா பிளாக்கும் முழுசா படிச்சி கமெண்ட் போடரன் போல இருக்கு

Anonymous said...

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மேலும் இரண்டாக தெரிவது சரி செய்யப்பட்டு விட்டது.

Anonymous said...

ம்ம் நல்லாத்தான் இருக்கு