Tuesday, December 25, 2007

முதியோரைப் பற்றிய எண்ண கிறுக்கல்கள்

நம்மை உருவக்கியவர்கள் நம் மூத்தோர்கள். அவர்கள் நிழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நிலை?.. ஓரளவு திட்டமிட்டவர்கள் சிலபல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுகின்றனர். ஆனால் சாதரண, நிரந்தர வருமானம் இல்லாதவர்களின் நிலைதான் மிகவும் பரிதாபம்.
முன்னர் கூட்டு குடும்பமாக இருந்தபோது இத்தைகைய பிரச்சனைகள் குறைவாக இருந்தது.அவர்களின் பிரச்சனைகள் அவ்வப்போது ஆராயப்பட்டு தீர்க்கப்பட்டன. மேலும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் எப்படியும் வீட்டோடு இருந்ததால் அவர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால் இன்றைய கலாச்சார யுகத்தில் தேவைகள் அதிகரித்து வருவதால் அதிக வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் உள்ளனர்.இதனால் இளைய சமுக தலைமுறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இதனால் முதியர்களின் தேவைகளை அறிந்து உதவும் மனப்போக்கு குறைந்து வருகிறது.
இது, தாங்கள் தனித்து விடப்படுகிறமோ என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக கசப்பு உண்ர்வு பெருகி இரு தரப்பையும் பாதிக்கிறது. மேலும் முதுமை காரணமாக ஏற்படும் உடல் உபாதைகளை மற்றவர்கள் அவ்வளவாக பொருட்படுத்தாத போக்கும் பெருகி வருகிறது. இதனால் புதுபுது பிரச்சனைகள் உருவாகி அவர்களுக்கிடையே இடைவெளி அதிகரித்து ஏறக்குறைய அனாதை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இத்தைகைய சூழ்நிலையில் முதியோரை காக்க வேண்டிய பொறுப்பு மக்கள் நல அரசுக்கு வேண்டும். அவர்களுக்கு நிதி உதவி மட்டுமின்றி சுகாதார மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டியது தரவேண்டியது அரசின் முக்கிய பொருப்பகும். அரசின் உதவி சரியான நபருக்கு செல்கிறதா, ஆட்கள் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்களா என்பதையும் அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

1 comment:

Mangai said...

I welcome any such thoughts about elders. I too have written about elders in my blog.
http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_4734.html

http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_11.html

Please read and post ur comments when u find time.