Friday, December 7, 2007

வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு, போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு

நம்மாலு ஒருத்தன் கிட்ட போய் கேட்டேன், வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு, போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு, அப்படின்னு தமிழ்ல பேச்சு வழக்குல சொல்ராங்கலே அப்படின்னா என்னான்னு கேட்டென்.
அவன் சொன்னான் எந்த வேலையுமெ கிடைக்காதவன் வாத்தியார் வேலைக்குதான் போகனும் அப்டின்னான்.அவன் எத வச்சி சொன்னான்ன, அந்த காலத்தில வாத்தியார் வேலை ஒரு சமூக பணியாகத்தான் செய்தாங்க.ஏன் அந்த காலம், கலைஞர் கடந்த ஆட்சியில ஆசிரியர்களுக்கு சம்பளம் எற்றும் வரை, வாத்தியார்ன பொண்ணு குடுக்ககூட மக்கள் யோசிச்சாங்க. நம்ம ஆளு அதவச்சிதான் சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்.

ஆனால் சரியான வாக்கியம் என்னான்னா வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு. நன்றாக படித்து, நன்றாக சொல்லித் தரும் திறமையினை கற்றவந்தான் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்பதுதான் மருவி விட்டது.

சரி போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு அப்படின்னா?? கேட்டேன்.அடாவடிய எதற்கும், யாருக்கும் பயப்படாம இருக்கறவனும் மேலும் "போக்கு" என்றால் இடம் இருக்க இடம் இல்லாதவந்தான் போலீஸ் வேலைக்கு போகனும்.சுருக்கமா சொல்லனும்னா எதற்கும் துணிஞ்சவந்தான் இந்த வேலைக்கு சரியானவன் என்று பொருள் அர்தத்தோட சொன்னான்.

நான் சொன்னேன், தம்பி அப்படியில்ல,மனிதர்களின் மனப்போக்கினைக் கற்றவன், போலீஸ் வேலைக்கு போகவேண்டும் - ஏனனெனில், அவனுக்கு திருடர்களின் மனப்பாங்கும் சாமானியனின் மனப்பாங்கும் நன்கு தெரிந்து இருக்கும். இது திரிந்து இப்போது இந்த முட்டாள்தனமான உருமாற்றத்துடன் வழங்கப் படுகின்றது.

என்னங்க ஐயா! நான் சொல்றது சரிதானே? தவறா இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்

2 comments:

புரட்சி தமிழன் said...

லேட்டஸ்ட்டா விஜயகாந்தோட ஏழைஜாதி படம் பார்த்தீரோ

மங்களூர் சிவா said...

அப்ப எத கத்தவன்பா கம்ப்யூட்டர் வேலைக்கு!!!!!