Friday, December 28, 2007

நச்சென ஒரு கதை

நல்லார் ஒருவர் உளரேல்என அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
கோட்டக்குப்பம் ஒரு அழகான கடற்கரை கிராமம். அந்த கிராமத்தில பல இன மக்களும் ஒன்றாக வசித்து வந்தாங்க. ஒரு நாள் சரியான மழை. மழைன்னா உங்க வீட்டு, எங்க வீட்டு மழை இல்ல, பேய் மழைன்னு சொல்வாங்கலே அது மாதிரி. ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காட இருக்கு. தண்டோர போட்டு எல்லோரையும் ஊர் மண்டபத்தில கூட சொன்னாங்க. ஏன்னா அதான் ஊர்லயே மேடான பகுதி, மேலும் இத மாதிரி காலகட்டத்தில இங்கதான் வந்து தங்குவாங்கா. அப்புறம் மழை நின்ன உடனே அவங்க அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. ஆனா இந்த தடவ மூனு நாலாகியும் மழை விடவேயில்லை. ஒரே இடி மின்னலுமா இருக்கு. அப்போ ஒரு பெருசு சொல்லிச்சு, இடி, மின்னல் எல்லாம் கெட்டவங்கல அழிப்பதற்காக ஆண்டவனால உருவாக்கப்படறது. இப்ப நாம எல்லோரும் ஒன்னா கூடியிருக்கிறோம். யாரவது ஒருத்தன் தப்பு பண்ணவன் இருந்தாகூட இடி இங்க விழுந்து நாம எல்லோரும் செத்து போயிருவோம். அதானால ஒருத்தன் ஒருத்தனா போய், அங்கவுள்ள பனை மரத்தை தொட்டுட்டு வாங்க, எவன் தப்பு பண்ணானோ அவன்மேல இடி விழுந்திடும், மத்தவங்கெலெல்லாம் தப்பிச்சிக்கிலாம்னு அப்பிடின்னார். சரின்னு சொல்லி ஒவ்வொருத்தனா போய் பனைமரத்த தொட்டுட்டு வந்தாங்க, ஒன்னுமே ஆவல, கடைசியா ஒருத்தந்தான் பாக்கி. அவனுக்கு உடம்பெல்லாம் வேர்த்திருச்சி. பயந்திகிட்டே போய் கண்ண மூடிக்கிட்டு பனைமரத்த தொட்டான். தொட்ட உடனே ஒரு பயங்கரமான இடி. கண்ண திறந்தான். அவனுக்கு ஒன்னும் ஆவல. அப்பாடான்னு திரும்பி பார்த்தான். அஙக பார்த்தா மண்டபத்து மேல இடி விழிந்து எல்லாம் செத்திட்டாங்க. அப்பதாங்க மேல சொன்ன திருக்குறல் எனக்கு ஞாபகம் வந்திச்சிங்க.