Sunday, December 9, 2007

நெஞ்சு பொருக்கதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

நீதிமன்றங்களின் நேரம் எவ்வளவு அதி முக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கம் எண்ணிலடங்கா. இந்தியாவிலுள்ள ஜார்கண்ட் மாநில நீதிபதி ஒருவர் இந்துக் கடவுள்களான ராமருக்கும் அனுமனுக்கும், சொத்து விவகாரம் ஒன்றில் சாட்சி சொல்ல நீதிமன்ற அழைப்பானை அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல, நீதிபதி சுனில்குமர்சிங், அதற்காகச் செய்திதாள்களிலும் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார். நீதிமன்ற ஊழியர் வழியாகவும் பிறகு பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பிய அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்திற்கு வர தவறி விட்டீர்கள், ஆதலால் இருவரும் உடனடியாக நீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிமன்றத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். ராமரையும் அனுமனையும் நீதிமன்றத்தின் முன்பு தோன்றும்படி அந்த விளம்பரத்தில் கேட்டிருந்தார். செவ்வாய் கிழமையன்று அவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜராயிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வராததால் அவர்களுக்கு அனுப்பட்ட அழைப்பானை முகவரி இல்லாமல் திரும்பி வந்ததாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.தான்பட் நகரின் துரித நீதிமன்ற நீதிபத்தான் அவர். ராமர் மற்றும் அனுமன் ஆலயங்கள் அமைந்திருக்கும் 1.4 ஏக்கர் நிலம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார் கோயில் பூசாரி மன்மோகன்பகத், ஆனால் ஊர் மக்களோ நிலம் கோயிலுக்கு சொந்தம் என்று சொல்கின்றனர். இதற்காத்தான் இதை செய்திருக்கிறார்.

நன்றி - தமிழ்முரசு - சிங்கை

பாமரனுக்கும் தெரியும் கடவுள் நேரில் வருவதயிருந்தால் எண்ணிலடங்கா வழக்குகளுக்கு நீதிமன்றபடி ஏறவே தேவையில்லை என்று. ஆனால் படித்த, மிக உயர்ந்த இடத்தில் உள்ள, ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் நாம் தீர்ப்பின் மூலம் தண்டிக்கும் உரிமையை வழங்கியிருகிறோம். அப்படிபட்டவர் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீண்டித்து கேளீக்கூத்து செய்தியிருக்கிறார். என் ஆதங்கத்தினால் இந்த பதிவு. உங்களின் கருத்துகளை பதியுங்களேன். தெரிந்துகொள்கிறேன்.

No comments: